கீழக்கரையில் சமுதாய நல்லிணக்கத்துக்கு எதிரான சுவரொட்டி – காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து அமைப்புகள் கண்டனம்…

கீழக்கரையில் அனைத்து சமூக மக்களும் நட்பறவுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் வேளையில் சமூக நல்லிணக்கத்தை குழைக்கும் வகையில் இந்து முன்னனியினாரால் கடுமையான வார்த்தைகளால் சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தன.  இச்சம்பவம் கீழக்கரையில் உள்ள அனைத்து சமுதாய மக்களின் மனதை மிகவும் பாதித்தது.

இந்த நிகழ்வை கண்டிக்கும் விதமாக  சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கீழக்கரை தாவா குழு, முஸ்லிம் பொது நல சங்கம், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சோசியல் டெமோக்ரட்டிக் ட்ரெட் யூனியன் (SDTU), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற கீழக்கரையில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டி உள்ளன.

இப்பிரச்சினைக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. அதே சமயம் இப்பிரச்சினைக்கு மக்கள் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக கையாள வலியுறுத்தி கீழைநியூசின் அங்கமான சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கீழை உள்ள அறிக்கையும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது:-


சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..