தமிழக மீனவர்கள் எட்டு பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..

இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து ஜூலை 16ல் மிதவையில் 2 மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு சென்ற இவர்களும், ஆக., 22 ல் புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் மோதி படகு கவிழ்ந்தது. இப்படகிலிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 6 பேர் மொத்தம் 8 மீனவர்களின் வழக்கு இன்று (14.9.18) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தராஜா மீனவர்களை செப்டம்பர் 26ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதையடுத்து மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இந்தியாவில் இருந்து இலங்கை சட்ட அலுவலகத்திற்கு அனுப்பினால் தான் விடுவிக்க முடியும் என இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர் . இது குறித்து பல முறை இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்ப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image