வத்தலக்குண்டு காங்கிரஸ் பிரமுகர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்..

வத்தலக்குண்டு காங்கிரஸ் கட்சியின் பிரமுகர், கனவா பீர் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார், மேலும் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராகவும், பொருப்பேற்றுக்கொண்டார்,

நிலக்கோட்டை MLA & திண்டுக்கல் (கி) மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கத்துரை முன்னிலையில் வத்தலக்குண்டுவை சேர்ந்த கனவா பீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இது சம்பந்தமாக கனவா பீர் கூறும்போது, “என்னை திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக நியமனம் செய்த, அண்ணன் தங்கதுரை, எம். எல். ஏ. அவர்களுக்கும், பரிந்துரை செய்த நகர செயலாளர் பாண்டி ராதா அவர்களுக்கும், தமிழ்நாடு மாநில மின் துறை செயலாளர் ரசீத் அவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன், மேலும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த பொறுப்பை செம்மையாக செய்து, சிறுபான்மை மக்களின் நலனுக்காக பாடு பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..