அரியலூரில் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு..

அரியலூர் பகுதியைச் சார்ந்தவர் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன். இவர் பல்வேறான சமுக பிரச்சினைக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அரியலூர் அண்ணா நகரில் உள்ளி நிர்மலா காந்தி பள்ளி அருகே உள்ள அரசு மது கடையை மூடக் கோரி காத்திருப்பு போராட்டம் 12.09.2018 அன்று  மாலை 4 மணிக்கு நடத்தியுள்ளார்.

இதன் தொடர்பாக இவரை காவல் துறையினர் கைது செய்து இரவு 8 மணிக்கு விடுவித்தனர். இதைப் பற்றி அவர் கூறுகையில், “நான் போராட்டத்திற்கு பயன்படுத்திய தேசிய கொடியையும், பாரதியின் படத்தையும் பிடுங்கி வைத்து கொண்டார்கள்”, அதை திருப்பி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?? என ஆதங்கத்துடன் கேட்கிறார்.

செய்தி:- அபுபக்கர்சித்திக்.

 

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..