கீழக்கரையில் புதிய பெட்ரோல் நிலையம் “அம்பலம் ஃபில்லர்ஸ்”…

கீழக்கரையில் இன்று (12/09/2018) புதிய “அம்பலம் ஃபில்லர்ஸ்” என்ற பெயரில், இந்தியாவின் முன்னனி எண்ணைய் நிறுவனமான ESSAR நிறுவனத்துடன் இணைந்து கீழக்கரை இராமநாதபுரம் பிரதான சாலையில் மின்சார அலுவலகம் அருகில் திறக்கப்பட்டது.

வாகனங்கள் பெருகி வரும், சூழலில் தரமான பொருட்களும் அவசியமாகிறது.  அந்த வகையில் தரமான சேவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

அம்பலம் பில்லர்ஸ் உரிமையாளர் சேக் உசேன் அவர்கள் திறப்பு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். இன்று காலை 11.30 மணி அளவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மூத்த சகோதரர் முத்து மரைக்கா கட்டிடத்தை திறந்து வைத்தார், KAM உமர் சாஹிப் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

———

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…