இராமநாதபுரம் அருகே பொறியியல் பட்டதாரியை தாக்கிய சம்பவத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்கு..தமுமுக சார்பாக முதல்வர் தனி பிரிவுக்கு மனு..

இராமநாதபுரம் மாவட்டம் அருகே பனைக்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செய்யது முகமது. டீ கடை உரிமையாளரான இவர் பனைக்குளம் தமுமுக கிளை தலைவராக உள்ளார். இவரது மகன் நிகால் அகமது, 21. பொறியியல் பட்டதாரி. 10. 9.18 இரவு 10:30 மணியளவில் வழுதூர் சாலை ஓரம் உள்ள பேக்கரி முன் தனது காரை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு டூவீலர்களில் வந்த 4 பேர் அங்கு வந்தனர். போதையில் இருந்த அவர்கள், காரை ஏன் இங்கு நிறுத்துள்ளீர் என நிகால் அகமது விடம் கேட்டனர்.

இது தொடர்பான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த போதை கும்பல் நிகால் அகமதுவின் நண்பர்களை விரட்டி அடித்தனர். தனியாக நின்ற நிகால் அகமதுவை டார்ச் விளக்கு, உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார். அக்கும்பல் நிகால் அகமது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.25 ஆயிரம், கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன், வெள்ளி செயினை அபகரித்து கொண்டு தப்பிச் சென்றனர். அக்கும்பல் அங்கிருந்து நகர்ந்ததும் நிகால் அகமதுவை, அவரது நண்பர்கள் மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக நிகால் அகமது புகாரின் அடிப்படையில் தெற்கு காட்டூரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் நாகவேல், வாலாந்தரவையைச் சூரப்புலி என்ற சுப்ரமணியன் மகன் கார்த்திக், அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மதி மகன் மகேந்திரன், வாலாந்தரவையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சீம்சுந்தர் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து நிகால் அகமது மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பனைக்குளம் தமுமுக கிளை தலைவர் செய்யது முஹம்மது, மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிககள்  கீழை பாதுஷா, இராமநாதபுரம் சுல்தான், இராமநாதபுரம் புரூக்கான், பனைக்குளம் பரக்கத்துல்லாஹ் ஆகியோர் மனு கொடுத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

———-

To Download Keelainews Android Application – Click on the Image

டிசம்பர் மாத இதழ்..

டிசம்பர் மாத இதழ்..