கொடைக்கானல் நகருக்குள் நுழைந்த காட்டெருமைகள்..ஆபத்தறியாமல் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிகள்..

திண்டுக்கல் மாவட்டம் எழில்கொஞ்சும் கொடைக்கானலில் காட்டில் உணவு இல்லாத காரணத்தால் சமீபகாலமாக காட்டு விலங்குகளான யானைகள் மற்றும் காட்டெருமைகள் நகரத்திற்குள் வரும் நிகழ்வு அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் முக்கியமான  கடைவீதி பகுதிகளில் காட்டெருமைகள் எளிதாக வந்து நேராக கொடைக்கானல் காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்தது. இதைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் காட்டெருமைகள் வழிதெரியாமல் மூஞ்சிக்கல் பகுதியில் நுழைந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று (10/09/2018) அன்று மீண்டும் டிப்போ கான்வென்ட் சாலையின் நடுவிலே சுமார் 10 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக வந்து பேருந்து வழித்தடத்தை மறித்து சுமார் அரை மணி நேரம் போக்குவரத்தை தடைசெய்தது. இதனால் சாலையில் நடந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தனர். அந்த இடத்திற்கு வனக்காவலர்கள்  உடனடியாக வராததால் அப்பகுதி பரபரப்பாக  காணப்பட்டது.

செய்தி:- கோடைரஜினி, கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), கொடைக்கானல்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image