கீழக்கரை நகராட்சியில் சொத்துவரி அதிகரிப்பு – நகராட்சி நிர்வாகம் அறிக்கை….

கீழக்கரை நகராட்சி 10/09/2018 தேதியிட்டு தமிழ் நாளிதழ்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 அட்டவனை 4ல் உள்ள விதிகளில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களில் கீழ் சொத்துவரிகள் மறுசீராய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின் படி கீழக்கரை பகுதி A, B, C என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சதுர அடிக்கான வரி உயர்வு அறிவிக்ப்பட்டுள்ளது. இதன் படி A மண்டலத்தில் சதுர அடிக்கு 0.80ல் இருந்து 1.20, B மண்டலத்தில் 0.60ல் இருந்து 0.90 மற்றும் C மண்டலத்திற்கு 0.40ல் இருந்து 0.60 பைசா என்ற கணக்கில் வரி திருத்தம் செய்ய்ப்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு சம்பந்தமாக ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் இந்த அறிக்கை வெளிவந்து 30 தினங்களுக்குள் எழுத்து மூமாக ஆணையாளருக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தொிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இது சம்பந்தமாக கருத்து கூறிய கீழக்கரை சமூக ஆர்வலர்கள் கீழிக்கரை சுகாதாரத்திலும் அடிப்படை வசதிகளிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது, ஆனால் வரியை மற்றும் அதிகரிப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும் என்கிறார்கள்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..