கீழக்கரை, இராமநாதபுரத்தில் பந்த் – பேருந்துகள் குறைவு – ஆனால் கடையடைப்புக்கு முழு ஆதரவு இல்லை..

இன்று (10/09/2018) அன்று காங்கிரஸ், திமுக மற்றும் எதிர்கட்சிகளால் தேசிய அளவில் கடையடைப்பு போராட்டத்திற்கு பெட்ரோல் விலைவுயர்வை கண்டித்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் காலை நேரத்தில் இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் எதிர்கட்சிகளால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

ஆனால் கீழக்கரை போன்ற பகுதிகளில் சில தனியார் பேருந்துகள் ஓடவில்லையென்றாலும் ஆட்டோக்கள் முழுமையாக ஓடியது. அதே போல் கீழக்கரை மற்றும் இராமநாதபுர பகுதிகளில் அதிகமான கடைகள் திறக்ப்பட்ட இருந்தது. இதற்கு முக்கிய காரணம் வரக் கூடிய நாட்களில் திருவிழா காலங்களாக இருப்பதால், கடையடைப்பதன் மூலம் சீசன் வியாபாரங்கள் கெட்டு விடும், பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாவர்கள் என்ற கருத்தை சில வியாபாரிகள் எடுத்து வைத்தனர்.

ஆனால் எது எப்படியோ தினமும் பெட்ரோல் விலையும் கூடுகிறது, சர்வதேச சந்தையில் இந்திய பண மதிப்பும் வீழ்ச்சி அடைந்த வண்ணம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.