Home செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நினைத்திரு! நிலைத்திரு! சர்வதச கல்வியறிவு நாளை முன்னிட்டு ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம்..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நினைத்திரு! நிலைத்திரு! சர்வதச கல்வியறிவு நாளை முன்னிட்டு ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம்  முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  08/09/2018 அன்று  காலை 10 மணி அளவில்  நினைத்திரு! நிலைத்திரு! சர்வதச கல்வியறிவு நாளை முன்னிட்டு ஒருநாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம்  கணினி பயன்பாட்டியல் மாணவி ஃபாத்திமா சிஃபானா  இறைவணக்கத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் A.R. நாதிரா பானு கமால்  வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்வின் உணர்வூக்கத்தின்சிறப்பு விருந்தினராக K.R. ரஹ்மான் முகம்மது (உற்பத்தி திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு மேலாளர், சர்வதேச எஃகு வாங்குபவர், உற்பத்தி இணைத்தல், ஹோண்டா உற்பத்தியின் துணை நிறுவனம் கனடா)  அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் நினைவு பரிசை வழங்கியது.

அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்றும், எனது விருப்ப பாடமாக தமிழ் மற்றும் வரலாறு இருந்ததற்கு காரணம் என்னுடைய ஆசிரியர் என்றும், தேவை தான் கண்டுபிடிப்பின் அடிப்படை என்றும், உங்கள் தேடல், உங்களை தேடியே பயணிக்க வேண்டும் என்றும், முதலில் கற்றலை தேடு பின்னால் பதவி, பொருள் உன்னை தேடி வரும் என்றும், பல அறிவியல் கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் சாதரண மனிதர்கள் தான் என்றும், தோல்விக்காக பயப்படாதே! எது உங்கள் வாழ்க்கைக்கு தேவையோ அதை நினைத்து பயணம் செய்யுங்கள்” என்றும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த சர்வதேச கருத்தரங்கில் பல்வேறு பள்ளியில் பயிலும் +2 மாணவிகளும், முகம்மது சதக் ஹமிது மகளிர் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். இறுதியாக திருமதி. சிவந்திமாலா வணிகவியல் மற்றும் கணினி பயண்பாட்டியியல் துறைத்தலைவர் அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி இனிதே முடிவடைந்து.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!