விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்..

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் தொடர்பான சிறப்பு முகாம்கள் குறித்த ஆட்டோ விளம்பரத்தினை 08-09-18 இன்று கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் திரு. தயாளன் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

அப்போது மண்டல துணை வட்டாட்சியர் திரு. கமலக்கண்ணன், தேர்தல் துணை வட்டாட்சியர் திருமதி. நளினி, அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி:- அபுபக்கர்சித்திக்,  அ.சா.அலாவுதீன். ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..