இராமநாதபுரத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இலவச சட்ட உதவி மையம் திறப்பு..

இராமநாதபுரம் சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான இலவச சட்ட உதவி மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. கயல்விழி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி டி. லிங்கேஸ்வரன், தலைமை குற்றவியல் நடுவர் வி அனில் குமார், சார்பு நீதிபதி சொர்ணகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் துரை முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக இராமநாதபுரத்தில் துவங்கப்பட்டுள்ளது. வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் இம்மையம் காலை முதல் மாலை வரை செயல்படும். திருநங்கைகள் தங்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு கவுன்சலிங் வழங்கப்படும். மேலும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று கொடுப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..