Home செய்திகள் இராமநாதபுரத்திற்கு செப்., 10ல் வைகை தண்ணீர் அமைச்சர் தகவல்…

இராமநாதபுரத்திற்கு செப்., 10ல் வைகை தண்ணீர் அமைச்சர் தகவல்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு வைகை அணையில் இருந்து செப்டம்பர் 10 ம் தேதி தண்ணீர் திறந்து விடபட உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார். ராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் பகுதியில் பெரிய கண்மாய் தென் கலுங்கில் இருந்து வைகை அணை தண்ணீர் வரும் பாதையை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் இன்று (08.9.18) ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தடையும் வகையில் அதன் பங்கு வினாடிக்கு 1,800 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப் வேண்டும். ஆனால், செப்டம்பர் 10ம் தேதியில் இருந்து 27 ம் தேதி வரை வினாடிக்கு 1,559 மில்லியன் கன அடி தண்ணீர்ர் தொடர்ந்து திறந்து விடப்படுவதாக சொல்லி உள்ளனர். தற்போது திறந்து விடப்படும் அளவை விட மேலும் 300 மில்வியன் கன அடி தண்ணீர் திறந்து விடாமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் நீராதாரம் பெருகும். மேலும் விவசாயம் ஓரளவு தழைத்தோங்கும். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தர வேண்டிய தண்ணீரின் பங்கு மற்றும் மேலும் தேவைப்படும் அளவு குறித்து விரிவாக தெரிவித்துள்ளேன். வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன். வைகை அணையில் போதுமான தண்ணீர் இருந்தால் கேட்ட அளவை விட கூடுதலாக தருகிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளார். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தடையின்றி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து சேரும் வகையில் இடையூறாக மண்டி கிடக்கு காட்டு கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் 1991ம் ஆண்டுக்கு பிறகு ரூ 1 கோடியில் தூர் வாரப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவ ராவ், பொதுப்பணி துறை கீழ் வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் வெங்கட கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!