கீழக்கரை நகராட்சி மேலாளரே இனி ஆணையாளர்..

கீழக்கரை நகராட்சி பொறுப்பு  ஆணையாளராக இருந்து வந்த  பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கடந்த வாரம் பழனி நகராட்சிக்கு  மாற்றமாகியதை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த  A.தனலெட்சுமி கூடுதலாக கீழக்கரை ஆணையாளர் பொறுப்புகளையும் சேர்த்து கையாளுவதற்கான அரசாணை அளிக்கப்பட்டுள்ளது.

இனி மேலாவது கீழக்கரை நகராட்சி பணிகள் தொய்வில்லாமல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

தகவல்: மக்கள் டீம்