திண்டுக்கல் மாவட்டத்தில் வீணாகும் காவிரி நீர் – வீடியோ செய்தி..

ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள அம்பாத்துரை, காந்திகிராமம், தொப்பம்பட்டி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்கள் தினசரி ரூ.200 க்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் அவலநிலையிலே உள்ளது.  இவ்வேளையில்  இந்த ஊராட்சிகளுக்கு காவிரியில் இருந்து வரும் தண்ணீர் பொது மக்களுக்கு சப்ளை செய்யப்படாமல் கடந்த 10 நாட்களாக வீணாகி வருகிறது.

இங்கு தினமும் பல்லாயிரம் லிட்டர்  காவிரி தண்ணீர் பொது மக்கள் கண் எதிரே அனைத்து ஊர்களிலும் உள்ள நீர் தேக்க தொட்டிகளில் இருந்து வீணாகி கொண்டிருப்பதை பார்த்து பொது மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதற்கு நகராட்சி முறையான நடவடிக்கை எடுத்தார் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்கும்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .