Home செய்திகள் உச்சிப்புளி டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் – முதலாம் ஆண்டு துவக்க விழா….

உச்சிப்புளி டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் – முதலாம் ஆண்டு துவக்க விழா….

by ஆசிரியர்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. யூத் ரெட் கிராஸ் அமைப்பின் 10மாணவிகள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஆ.வள்ளி விநாயகம் முன்னிலையில் விழா நடைபெற்றது. கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் பேரசிரியர் எம். ஆஷிகா வரவேற்றார்.

இராமநாதபுரம் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் யூத் ரெட் கிராஸ் அமைப்பிற்குரிய பதாகையையும் வழங்கிஅமைப்பினத் துவக்கி வைத்தார். ரெட் கிராஸ் அமைப்பின் தந்தை  ஜீன் ஹென்றி டுனாண்ட் படத்தினையும் முதல்வர் முனைவர் கே. கமர் ஜஹான் மற்றும் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரிடமும் வழங்கி யூத் ரெட் கிராஸ் அமைப்பினைத் துவக்கி வைத்தார்.  

ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ரெட் கிராஸ் வரலாறு, கொள்கைகள்,  நோக்கம் மற்றும் கட்டமைப்பு முறை ஆகியவை பற்றி விவரித்தார். மாணவிகள் அருகில் உள்ள கிராமத்திற்குச் சென்று பொது சுகாதாரத்தைப் பற்றியும் பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி ஏற்றனர்.

கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் மாணவி வி.ஜெர்ஷியா எஸ்தர் நன்றியுரையாற்றினார். கல்லூரியின் பேராசிரியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!