சிறுபான்மையின மாணவர்களுக்கு பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம்….

சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சி சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘‘பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் ” (முன்பு மௌலானா ஆசாத் கல்வி ஸ்காலர்ஷிப்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பெற்றோரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; 9–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குறைந்த பட்சம் 50% மதிப்பெண்களும், 12–ம் வகுப்பு பயிலும் மாணவிகள் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களும் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களும் முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்க வேண்டும்; மேலும், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை பெற மாணவிகள் (புதியது பெற்றவர்கள் மட்டுமே) குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களை முந்தைய வகுப்பில் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 9–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை வருடத்திற்கு ரூ.10,000-மும் 11–ம் வகுப்பு முதல் 12 –ம் வகுப்பு வரை ரூ. 12,000-மும் இரண்டு தவணைகளில் மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பயன் மாற்று முறையில் வழங்கப்படும். மேற்படி கல்வி உதவித்தொகையில் சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருள் மற்றும் உண்டி உறைவிடம் ஆகிய செலவினங்கள் அடங்கும்.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவிகள் www.maef.nic.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே 15–ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்பு, ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து சான்றாவணங்களுடன் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் 30–ந் தேதிக்குள் கீழ்க்குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையுமாறு அனுப்பப்பட வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் (பொ) கருணாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..