Home செய்திகள் கீழக்கரையில் நடைபெற்ற “இது நம்ம தெருங்க..” நிகழ்வு.. வீடியோ பதிவுடன்..

கீழக்கரையில் நடைபெற்ற “இது நம்ம தெருங்க..” நிகழ்வு.. வீடியோ பதிவுடன்..

by ஆசிரியர்

கீழக்கரை சின்னக் கடை சுற்றியுள்ள பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும் ஓ ர் புதியதொரு நிகழ்வு இன்று (04/09/2017) காலை 11 மணிக்கு தொடங்கியது.

இந்த  நிகழ்வின் ஆரம்பமாக  சிறப்பு அழைப்பாளர்கள் கீழக்கரை நகராட்சி மேலாளர்  A. தனலெட்சுமி, சுகாதார ஆய்வாளல் பூபதி, முன்னாள் சேர்மன் பசீர், வெல்ஃபேர் அசோசியேசன் செயலாளர் அஜீஸ்  சிறிதுரையாற்றினர்.  அதைத் தொடர்ந்து “தெருக்களில் குப்பைகளை வீச மாட்டோம்”  என உள்ளடக்கிய வாசகங்களுடன் ஹமீதியா பள்ளியை சார்ந்த சுமார் 150 மாணவிகள் பொதுமக்கள் முன்னிலையில்  உறுதிமொழி எடுத்தனர்.

இந்திகழ்வின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள 10 கடைக்காரர்களுக்கு குப்பைகளை  முறைப்படி சேகரிக்க குப்பை தொட்டி  (Dust Bin) கொடுக்கப்பட்டது.  அவர்களிடம் பேசிய நகராட்சி ஆய்வாளர் இவ்விதியை மீறினால்  ₹.500/ முதல் அபராதம் விதிக்கப்படும் தெரிவித்தார்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீதிகளில் “ இது நம்ம தெருங்க ” என்ற வாசம் அடங்கிய 12 பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், நுகர்வோர் கழகம் செய்யது இப்றாகீம், சின்னக்கடைதெரு பகுதியின் சர்பத் கடை தபுல்ஆலம், ஜமால் பாரூக், டீ கடை ஆலிங்கம், இக்பால், சிந்துபாத் இப்னு,  இடிமின்னல் ஹாஜா, சாகுல் ஹமீது, இஸ்லாமிய கல்வி சங்கம் முகைதீன், நகராட்சி அதிகாரிகள் பலர் உட்பட துப்புரவு மேற்பார்வையாளர்கள் மனோகரன், சக்தி வேல் மற்றும் தெரு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவியர்கள் சின்னக்கடைத் தெரு, ஓடக்காரப்பள்ளி, அகமது தெரு வழியாக மீண்டும் சின்னக்கடை தெருவுடன் ஊர்வலம் நிறைவு செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக கலந்து கொண்ட  மாணவியருக்கு குளிர் பானம் வழங்கப்பட்டது.

தகவல்: மக்கள் டீம் :

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!