மாவட்ட அளவிளான கைப்பந்து  போட்டி பரமக்குடி, இளையாங்குடி மற்றும் கீழக்கரை அணியினர் வெற்றி…

இராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக  மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் (கைபந்து) போட்டி நடந்தது.  இப்போட்டியில் பரமக்குடி ராஜா சேதுபதி அணி முதல் பரிசு, இளையான் குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி இரண்டாம் பரிசு மற்றும் கீழக்கரை கண்ணாடி வாப்பா ஹேண்ட் பால் அணி மூன்றாம் பரிசையும்  வென்றன.

பின்னர் போட்டியில் வென்ற அணி வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்பால் ஜெயசீலன் பரிசு வழங்கினார். ஹேண்ட் பால் அசோசியேஷன் செயலாளர் ஆசிரியர் அக்பர் ஏற்பாடுகளை செய்தார். ஹாக்கி பயிற்றுநர் தினேஷ் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

———————/::::-/////——————————-