Home செய்திகள் இராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி…

இராமநாதபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 162 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே தேர்போகி ருக்மணி சத்யபாமா ஸமேத நவநீத கிருஷ்ணஸ்வாமி (கண்ணன்) கோயிலில் இதையொட்டி சுதர்ஸன ஹோமத்துடன் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இரவு சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து 108 திருவிளக்கு பூஜை, போட்டியில் வென்றவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

இரவு 11 மணியளவில் வழுக்கு மரம் ஏறும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். தேர்போகி கிராமத் தலைவர் ஆர்.வேலு, துணை தலைவர் மங்கள நாதன், முன்னாள் தலைவர் காத்தமுத்து, பொருளாளர் ரத்தினம், கோயில் டிரஸ்டி எஸ். நாகராஜன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் த.ராதாகிருஷ்ணன், கோயில் பூசாரிகள் பால்க்கரசு, மோகன் குமார், இளைஞரணி நிர்வாகிகள் சதீக், கோசாமணி உள்பட பலர் பங்கேற்றனர். விழா குழு நிர்வாகிகள், கிராம பொது மக்கள், கோகுல யாதவ தர்ம பரிபாலன சபை, கோகுல யாதவர் இளைஞர் சங்கம், அழகுமுத்து இளைஞர் இளைஞர் பேரவையினர் ஏற்பாடு செய்தனர்.

உத்தரகோசமங்கை:ஏர்வாடி அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி நேற்று (செப்.2) அதிகாலை 4:00 மணியளவில் சுதர்ஸன ஹோமம், காலை 11:00 மணியளவில் விநாயகர் கோயிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ‘கோவிந்தா கோஷம்’ முழங்க வீதியுலா வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு தீபாராதனைக்கு பிறகு வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 12.01 மணிக்கு 18 வகை அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இது போல் இராமநாதபுரத்தில் 16, பரமக்குடியில் 40, கமுதியில் 14, ராமேஸ்வரத்தில் 4, கீழக்கரையில் 31, திருவாடானையில் 9, முதுகுளத்தூரில் 47 என 162 இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி முதல் விழா நடந்தது. இதில் கொம்பூதி உள்பட13 இடங்களில் உறியடி , தேரோட்டம் இன்று நடக்கிறது. பல்வேறு இடங்களில் வழுக்கு மரம் ஏறுதல் உள்பட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். ——————/////—————//////——————-

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!