Home செய்திகள் இராமநாதபுரத்தில் பா.ம.க வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் பொதுக்கூட்டம்..

இராமநாதபுரத்தில் பா.ம.க வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் பொதுக்கூட்டம்..

by ஆசிரியர்

தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை காக்கவும், வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு பிரசார பயணம் பா.ம.க., சார்பில துவங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி லாலிபாறையில் துவங்கிய இப் பயணத்தின் இரண்டாம் நாள் பொதுக் கூட்டம் இராமநாதபுரத்தில் நடந்தது. இதில் பா.ம.க .. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். மாநில தலைவர் கோ.க.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ரமணன், பொருளாளர் திலகபாமா, துணை செயலாளர் தளபதி ராஜ்குமார், மாவட்ட செயலாளர் அக்கீம் உள்பட பலர் பங்கேற்றனர்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வைகை ஆற்றை காப்பதில் நாம் அனைவரும் கை கோர்க்க வேண்டும். தாமிரபரணி, காவிரி, அத்திக் கடவு அவினாசி திட்டம், மேட்டூர் உபரி திட்டம், கொள்ளிடம், பாலாறு ஆறுகளை காப்போம் என்ற . விழிப்புணர்வு பிரசார பயணத்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தற்போது ஆலோசித்து வருகிறது. தண்ணீயில்லாத காடு என்ற மோசமான வார்த்தை 50 ஆண்டுகளுக்கு முன் 3 போக சாகுபடி நடந்துள்ளது. நாகரீகமான கட்சி எங்கள் மீது குறைகள் உள்ளது. குறைவான குறைவுகளுடன் உள்ள கட்சி. ஆள வேண்டும என்பது நோக்கமல்ல. தமிழத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்சனை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டுள்ளது. தண்ணீர் தேக்கும் திட்டங்கள் இல்லை. மன்னர் காலத்தில் கட்டிய நீர்த்தேக்கங்களை 50 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான ஏரிகளை பாமக சார்பில் தூர் வாரியுள்ளோம். இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் உள்ளன. கர்நாடகா, ஆந்திரா மற்றும் இதர வட மாநிலங்களில் மழை பொழிவு குறைவு. நீர் மேலாண்மை திட்டத்தில் திராவிட கட்சிகள் முதலீடு செய்யவில்லை. மாறாக இலவச திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தமிழக முன்னேற்ற திட்டங்கள் பா ம க விடம் நிறைய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீரன்றி வைகை வறண்டுள்ளது. வைகை அணையின் 71 அடி உயரத்தில் 21 அடி தூர்ந்து போயுள்ளது. மதுரை நகருக்குள் வைகை வரத்து கால்கள் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், ரசாயன கழிவுகள், திறந்த வெளி கழிவுகளுடன் சேர்ந்து இதர பகுதிகளுக்கு சுகாதாரமற்ற தண்ணீராக வந்து சேருகிறது. 258 கி.மீ., நீளம் கொண்ட தமிழகத்தின் 4 வது பெரிய ஆறான வைகையை நாம் காப்பாற்ற வேண்டும். மணல் கொள்ளையர்களை சிறையில் போட வேண்டும். தமிழக மானம், மரியாதை காக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் இல்லை சீமை கருவேல மரங்கள் மண்டி கிடக்கிறது. இதை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வில்லை. இவற்றிற்கு பாமக மட்டுமே தீர்வு காண முடியும். கேரள வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு தண்ணீர் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதிலளிக்காமல் மவுனம் சாதிப்பது வருத்தமளிக்கிறது. மேட்டூர் அணை உபரி நீர் கடலில் கலந்துள்ளது. வீணாகும் நீரை தேக்க காவிரி குண்டாறு திட்டம் போன்றவற்றில் நிதி முதலீடு செய்ய வேண்டும் 62 ஆமிரம் கோடி இலவசம், மானியத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடனுக்கான ஒரு நாள் வட்டியில ஒரு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டி விடலாம். நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் 20 நீர்ப்பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளன. எடப்பாடிக்கும் நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லை. அரசியல் பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் ஓரணியில் வாருங்கள். தமிழகத்தில் எவ்வித நீர் பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. மழையை தேக்கி ரூ.120 லட்சம் கோடி ஆண்டுக்கு செலவிட்டால் சாகுபடி தழைக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் அதிகரிக்கும். விவசாயிகளை பற்றி சிந்திக்கும் பா ம க தான் விவசாயத்திற்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என குரல் கொடுத்தது.

மத்திய சுகாதார துறையில் 50 ஆண்டுகளில் எந்த அமைச்சரும் செய்யாததை மன்மோகன் சிங் அமைச்சரவையில் அங்கம் வகித்த பாமக அமைச்சராக இருந்த நான் (அன்புமணி ராமதாஸ்) கொண்டு வந்தேன். குட்காவை தடை செய்தது அன்புமணி ராமதாஸ். ஆனால் தமிழகத்தில் குட்கா விற்பனை தொடர்கிறது விஜயகாந்த் உடல் நலம் தேறி அரசியலுக்கு மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும். மதுவை ஒழிக்க 37 ஆண்டு கால போராட்டத்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு போராட்டத்திற்கு இதர கட்சிகள் ஒருங்கிணைந்தது பா.ம.க., விற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்திற்கு மூன்றில் ஒரு பங்கு வருவாய் மது விற்பனையால் கிடைக்கிறது என்பது வெட்கக்கேடாக உள்ளது. பா ம க வின் முற்போக்கு திட்டங்கள் இன்றைய தலைமுறைக்கானதல்ல. அடுத்த தலைமுறையை காப்பதே. தமிழகத்தின் ஆட்சி மாற்றம் இளைஞர்கள் கையில் உள்ளது. கொள்ளையடித்த வரி பணத்தில் இலவசம் வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர், என பொதுக்கூட்டத்தில் பேசினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!