Home செய்திகள் இராமநாதபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்..

இராமநாதபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.09..2018) மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் வாக்காளர் பட்டியலில் 2019-ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க முறை  திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலினை வெளியிட்டார்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்ததாவது,” இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 01.01.2019-ம் தேதியினை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்கத் திருத்தம்-2019 மேற்கொள்ளப்படவுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 5,56,614 ஆண் வாக்காளர்களும் 5,57,369 பெண் வாக்காளர்களும் 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,14,048 வாக்காளர்கள் உள்ளனர். 

மேலும் 11.01.2018 முதல் 31.08.2018 வரையிலான நாட்களில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4,795 வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 5,895 வாக்காளர்கள் இறப்பு காரணமாகவும், 951 வாக்காளர்கள் இரட்டை பதிவு காரணமாகவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் அதாவது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் அதாவது வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களில் (DESIGNATED LOCATIONS) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், ஊரகப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் (BLO) வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்களார் பட்டியல் பெயரைச் சேர்ப்பதற்கு, இந்தியக் குடியினராய் இருத்தல் வேண்டும்.  01.01.2019 அன்று 18 வயது நிரம்பியவராகவும் (அதாவது 31.12.2000 அன்றோ அதற்கு முன்போ பிறந்தவராய் இருத்தல் வேண்டும்)பதிவு செய்யக் கோரும் பகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.  

முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட (அதாவது உங்கள் பெயர் வேறெங்கும் பதிவு பெறாமலிருந்தால்) அல்லது ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் – படிவம் 6-ம், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட – படிவம் 6யும், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் – படிவம் 8யும், பெயரை நீக்க – படிவம் 7-ம்ää பெயர், வயது, பாலினம், உறவுமுறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய – படிவம் 8ம் சம்பந்தப்பட்ட நபர்கள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.  

மேலும், 01.09.2018 முதல் 31.10.2018 வரை படிவம்-6,7,8 மற்றும் 8A பெறப்படும். அதேபோல 08.09.2018, 22.09.2018, 06.10.2018ää 13.10.2018 ஆகிய தினங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகள் நடத்தப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்படும்.

இது தவிர 09.09.2018, 23.09.2018, 07.10.2018, 14.10.2018 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு படிவம்-6,7,8 மற்றும் 8A பெறப்படும்.  01.09.2018 முதல் 31.12.2018 வரையிலான காலத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு, வாக்காளர் பதிவு அதிகரியால் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு 04.01.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கெட்ஸிலீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, வருவாய் கோட்டாட்சியர்கள் (இராமநாதபுரம்) டாக்டர்.ஆர்.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, தேர்தல் வட்டாட்சியர் கல்யாணக்குமார் உள்பட அரசு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!