காட்பாடியில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட கல்லூரி மாணவனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..  – குற்றவாளிகளின் கைவரிசை தொடர்வதால் மக்கள் அச்சம்…

வேலூர் மாவட்டம்,காட்பாடி விருதம்பட்டு அருகேயுள்ள ராதாகிருஷ்ணன் நகரில் வசிப்பவர் ரமேஷ்.  இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் மேலாராக பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது மகன் டிஷோ ரமேஷ் (21) திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊரான காட்பாடிக்கு வந்திருந்தபோது கடந்த மாதம் 16 ஆம் தேதி இரவு  காரில் மாணவரை வலுக்கட்டாயமாக தூக்கி கடத்தி சென்றனர். முதலில் மாணவன் செல்போனிலிருந்து அவரின் பெற்றோருக்கு தொடர்புகொண்டு உங்களின் மகன் உயிரோடு வேண்டுமானால் ஒரு கோடி கொடுக்க வேண்டுமென மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் காவல்துறையினர் மாணவரின் செல்போன் சிக்கனலை வைத்து பார்த்த போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பதாக சிக்கனல் காட்டியது. இதனால் கடத்தல் கும்பல் மாணவனை காரிலேயே வைத்துகொண்டு எங்கும் நிறுத்தாமல் சுற்றி வருகின்றனர் என்பதுதெரியவந்துள்ளது.

இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து ஆந்திரமாநிலம் சித்தூருக்கு அனுப்பி தேடினர். பின்னர் போலீஸார் கடத்தல்காரர்களை சுட்டு பிடிக்ககவும் திட்டமிட்டனர். இதனால் பயந்து போன கடத்தல்காரர்கள் மறு நாள் மாணவனை விடுவித்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த நிலையில் இன்று (01/9/2018) அதிகாலையில் மாணவனின் வீட்டிர்க்கு வந்த மர்ம கும்பல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளது. இதில் வீட்டின் வெளியே நிற்க்க வைத்திருந்த 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த ஏசி மற்றும் பல பொருட்கள் எரிந்து சேதம் ஆயின இது குறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளின் கைவரிசை தொடர்வதால் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தகவல்:- பிரபு, காட்பாடி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன், மூத்த நிருபர் கீழை நியூஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..