Home செய்திகள் இராமநாதபுரம் அருகே கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

இராமநாதபுரம் அருகே கால்நடை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்…

by ஆசிரியர்

தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 15வது சுற்று கோமாரி (கால், வாய்) நோய் தடுப்பூசி முகாம் இராமநாதபுரம் அருகே பெருங்களுர் கிராமத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியா வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். மண்டல இணை இயக்குநர் முருகேசன், பரமக்குடி உதவி இயக்குநர்கள் சிவக்குமார் (பரமக்குடி), செங்குட்வன் ( இராமநாதாரம்), கால்நடை மருத்துவர் முருகராஜன், கால்நடை ஆய்வாளர்கள் வனிதா, சத்யா, பிரபாகரன், ஆறுமுகம், அருணகிரி, லோகிதாசன், முனியாண்டி, பரிமளம் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் 86, 945 கால்நடைகளுக்கு இன்று (செப் 1) முதல் செப். 21 வரை தடுப்பூசி போடப்படுகிறது. பெருங்களுர் ஊராட்சி கண்மாயை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். முறையாக பராமரிக்கபடுவதால் கிராம மக்களை பாராட்டினார். பெருங்களூர் கிராம சிறுவர்களுக்கு ஆப்பிள் பழங்கள் வழங்கினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!