ஹஜ் சமயத்தில் தன்னார்வ தொண்டாற்றிய தமுமுக மற்றும் தன்னார்வ அமைப்புகள்..

ஹஜ்ஜில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை புரிந்தனர். அதில் இவ்வருடம் தமுமுக தன்னார்வலர்களும் சேவை செய்தனர். ஜித்தா, ரியாத், தம்மாம் ,மற்றும் சவூதியின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமுமுக தன்னார்வலர்கள் இவ்வருடம் ஹஜ் தன்னார்வ சேவையில் களமிறங்கினர்.

இந்நிலையில் சேவை செய்த தமுமுக தன்னார்வலர்களின் செயலைப் பாராட்டிய ஐரோப்பிய ஹஜ் யாத்ரீகர் ஒருவர், இவர்களின் சேவையைக் கண்டு கண்கலங்கியதோடு, கையிலிருந்த டாலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தன்னார்வலர்கள், “நாங்கள் பணத்திற்காக சேவை செய்யவிலை இறைவனிடம் இருந்து கிடைக்கும் கூலிக்காக சேவை செய்கிறோம்” என்று கூறியுள்ளனர். இதனால் மேலும் நெகிழ்ந்து போன அந்த ஐரோப்பிய நாட்டு ஹஜ் யாத்ரீகர், இவர்களுக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்று பல சம்பவங்கள் ஹஜ்ஜில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தமுமுக தன்னார்வலர்கள் களப்பணியில் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் மிகவும் உடல் நலம் இல்லாமல் இருந்த ஹஜ் யாத்ரீகர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனையில் சேர்க்க உதவி புரிந்தனர். வழி தெரியாமல் இருந்த பலருக்கு வழி காட்டினர். உடல் முடியாத சிலரை உரிய இடங்களில் கொண்டு சேர்த்தனர்.

அதேபோல திக்குத் தெரியாமல் தவித்த ஈரான் நாட்டு முதியவரை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் தமுமுக தன்னார்வலர்களுக்காக நன்றியுடன் பிரார்த்தித்தது நெகிழ்வான தருணமாக இருந்ததாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

தமுமுகவினர் ஹஜ் சேவையில் ஈடுபடுவதற்கு உறுதுணையாக இந்திய துணை தூதரகத்துடன் தொடர்பு ஏற்படுத்தி, பேருந்து வசதி தங்குமிடம், உணவு வசதி மற்றும் ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு சேவைகளில் உறுதுணையாக முக்கிய பங்காற்றி ஜித்தா தமிழ் சங்க நிர்வாகி சிராஜ் மிக முக்கிய பங்கு வகித்தார். மற்றும், தன்னார்வ சேவையில் ஆரம்பம் முதல் செயலாற்றி வந்த தமுமுக மேற்கு மண்டல துணைப் பொதுச் செயலாளர் இர்ஃபான் (மக்கா) மற்றும் ரிள்வான் கவுரவ ஆலோசகர் அஜ்வா நெய்னா மற்றும் தமுமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த சேவையில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..