இராமநாதபுரத்தில் ரோட்டரி டென்னிஸ் போட்டி…

ரோட்டரி கிளப் ஆப் இராம்நாடு சார்பாக  இராமநாதபுரம் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி டென்னிஸ் மைதானத்தில் நடந்தது.  3 நாட்கள் நடந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ராஜேஷ், திலீப் ஜோடி , அசோக்குமார், முரளி ஜோடியை வென்றது. ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் அசோக்குமார், மாஸ்டர் ஹரி யோகித்தை வென்றார். 15 வயதிற்குட்பட்டோர் ஆட்டத்தில் மாஸ்டர் ஹரி யோகித், பரத்வாஜை வென்றார். 12 வயதிற்குட்பட்டோர் ஆட்டத்தில் சுகிர்தன், நவீனை வென்றார். 10 வயதிற்குட்பட்டோர் ஆட்டத்தில் ஹரி, மாஸ்டர் சுபாஷை வென்றார்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் காந்தி தலைமை வகித்தார். காந்தி தனது உரையில், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி டென்னிஸ் வீரர்களுக்கு தேவையான பண உதவி செய்யப்படும். எனவே, டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமுடைய ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என்றார். தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு இரண்டாவது முறையாக பங்கேற்கச் செல்லும் மாண்வர் நந்தகிஷோருக்கு ரோட்டரி சங்கத் தலைவர் காந்தி வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் செய்யதா பரிசு வழங்கினார்.

போட்டியில் கலந்து கொண்டோருக்கு வழக் கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராம வன்னி பங்கேற்பு சான்றிதழ் வழங்கினார். ரோட்டரி டைரக்டர்கள் கணேஷ் பாபு (ஆனந்தம் ஜவுளி நிறுவன உரிமையாளர்), பார்த்தீபன், ராஜா குமரன் சேதுபதி, ரோட்டரி பட்டயத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லத்துரை அப்துல்லா, வழக்கறிஞர் சோமசுந்தரம், டென்னிஸ் பயிற்சியாளர்கள் ஜானி பன்னீர் செல்வம், முத்துராமலிங்கம், சோமசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர். ரோட்டரி சங்க செயலாளர் ஜெகதீஷ் நன்றி கூறினார்.

செய்தியாளர் – முருகன், இராமநாதபுரம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..