கேரள வெள்ள நிவாரணத்திற்காக பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேகரித்த இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள்..

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உலகில் பல இடங்களில் இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கீழக்கரை இஸ்லாமிய பள்ளி குழும மாணவ, மாணவிகளும் பொருட்கள் சேகரிக்க தொடங்கினர்.  இதுவரையில் ₹.4 லட்சம் மதிப்புக்கு மேலாக பொருட்களை சேகரித்துள்ளனர்.

இது சம்பந்தமாக பள்ளியின் தாளாளர் இப்ராஹிம். கூறுகையில் தொடர்ந்து பொருட்கள் மாணவ, மாணவிகள் மூலம் வந்த வண்ணம் உள்ளன, ஆனால் நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு, இதுவரை சேகரித்த பொருட்களை அனுப்ப முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதில் சில மாணவ, மாணவிகள் ஆர்வ மிகுதியால் பணமாக கொண்டு வந்தனர், ஆனால் பொருட்கள் மட்டுமே சேகரிப்பது என முடிவு செய்திருந்ததால் பணம் திருப்பி அளிக்கப்பட்டது என்றார்.