தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக (WJUT) முப்பெரும் விழா..

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், சார்பாக  சர்வதேச பத்திரிகையாளர்கள் தினம்-சர்வதேச மகளிர் தினம்- மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், எனும் முப்பெரும்விழா கோவை IMA ஹாலில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் அ ஜெ சகாயராஜ், மற்றும் துணை தலைவர் பிரதீப் குமார், பொது செயலாளர் சாலமன் மோகன் தாஸ்,சிறப்பு விருந்தினர்களாக, காவல்துறை உயர் அதிகாரிகள் நந்தகுமார் (IRS) மற்றும்  பல மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

இன்னும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கேரள மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ஜெ.அஸ்கருக்கு  நந்தகுமார் (IRS), பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

என்னை கவுரவிக்கும் வகையில் செயல்பட்ட மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று ஜெ. அஸ்கர்,  மாநில இணை செய்தி தொடர்பாளர், தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகை யாளர் சங்கம், அறிக்கை வெளியிட்டுள்ளார்.