வீட்டு சுவையை மிஞ்சும் “சக்கீப் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்”..

கீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய தலைமுறைக்கு என்ன என்பதே தெரியாது.

ஆனால் இன்றும் பாரம்பரிய சுவை மாறாமல் முழு நேர வணிக நோக்கத்துடன் இல்லாமல் சுவை அறிந்து கேட்பவர்களுக்கு வாய்க்கு சுவையாக இனிப்பு வகைகளை செய்து வருகிறார் நடுத்தெருவைச் சார்ந்த MUV.முகைதீன் இபுராஹிம் என்பவர். இவர் வீட்டிலேயே பிறரை வேலைக்கு அமர்த்தாமல் குடும்பத்தார் உதவியுடன் தானே அனைத்து உணவுகளையும் செய்து விற்பனை செய்து வருகிறார்.  இதில். குறிச்சா எனும் உணவை மக்களே மறந்த நிலையில் இன்றும் அதன் சுவை மாறாமல் ஆர்டரின் பேரில் செய்து வருகிறார் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.

உங்களுக்கு தேவையான பொருட்களுக்கு 90920 90305 / 96776 40305 / 98846 40305 / 94433 58305 என்ற எண்ணுக்கு அழைத்து கூறினால், உங்கள் வீட்டிற்கே சுவை மாறாமல் கொண்டு வந்து தருகிறார்கள்.  கீழக்கரை திண்பண்டங்களை உண்மையான சுவையுடன் சுவைத்து பாருங்களேன்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..