முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி …

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி 2004ல் தொடங்கப்பட்டது. இங்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு 400−க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.


கல்லூரிக்கு செல்ல காலையிலும் மாலையிலும் போதிய பேருந்து வசதி இல்லாததால் இவ்வழியாக செல்லும் பேருந்துகளில் மாணவர்கள் படி மற்றும் மேற்கூரையில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கல்லூரி வளாகத்திலயே தேங்குவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் இக்கல்லூரி மாணவர்கள் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். கல்லூரிக்கு பாதுகாவலர் இல்லாததால் மது அருந்துபவரின் கூடாரமாக மாறி விட்டது என்ற குற்றச்சாட்டும் மாணவர்கள் மத்தியில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.