Home செய்திகள் இராமநாதபுரத்தில்  வாஜ்பாய் அஸ்தி.. அரசியல் உள் நோக்கமில்லை –  எச்.ராஜா..

இராமநாதபுரத்தில்  வாஜ்பாய் அஸ்தி.. அரசியல் உள் நோக்கமில்லை –  எச்.ராஜா..

by ஆசிரியர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் தனது 93 வயதில் ஆகஸ்ட் 16ம் தேதி மறைந்தார். அவரது அஸ்தி சென்னை அடையார், மதுரை வைகை, ஸ்ரீரங்கம் காவிரி, ஈரோடு பவானி நதிக்கரைகள், இராமேஸ்வரம், கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பதற்கு தமிழக பா. ஜ., முடிவு செய்தது. இதன்படி சென்னையில் ஆக., 20ல் துவங்கிய அஸ்தி ரத யாத்திரை பா.ஜ., தேசிய செயலாளர் எச். ராஜா தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், பா.ஜ., மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்ம கார்த்திக் . தி.மு.க வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் கிருபானந்தம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பா.ஜ.,, தேசிய செயலர் ராஜா கூறியதாவது: முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் தேசபக்தர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்ட தலைவராக திகழ்ந்தார். ஆர் எஸ் எஸ் உருவாக்கிய மிக சிறந்த தலைவர் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜியா வுல் ஹக்கால் பாராட்டப்பட்டவர். எதிரியை வெல்லக் கூடிய சிறந்த மதிநுட்பம் நிறைந்தவர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அரசு தரப்பு வாதத்தை எடுத்துரைக்க அப்போதைய பிரதமர் நரசிம்மராவால் அடையாளம் காட்டப்பட்டவர். மரணத்தை மனம் உவந்து ஏற்றுக்கொண்ட வாஜ்பாய் இந்தியாவில் மீண்டும் அவதரிப்பார். அவரது அஸ்தி கரைப்பு விஷயத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கம் இல்லை. இறை நம்பிக்கை இல்லாத ஜவகர்லால் அவரது சாம்பலை நாடு தூவுங்கள் என்ற சொல்லி மறைந்தார். அப்போது அதை யாரும் அரசியலாக்கவில்லையே. தற்போது மட்டும் ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!