காக்கி சட்டைக்கும் இருக்கிறது ..ஈர மனது …

மதுரையில் இருந்து இராமநாதபுரத்தில் இருக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக செந்தில் முருகன் என்பவர் தனது மனைவியை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து இன்று இரவு (25/08/2018) வந்துள்ளார்.   அவர் பரமக்குடி அடுத்து மஞ்சூர் அருகே  குறுக்கே பாய்ந்த நாயை தவிர்க்க முயற்சித்ததில்   செந்தில் முருகன் நிலை தடுமாறி மனைவியுடன் சாலையில் விழுந்தார். இந்த விபத்தால் இவருக்கு காயம் ஏற்பட்டதோடு அவர் மனைவி படுகாயம் அடைந்தார். அச்சமயம் அவ்வழியாக  ரோந்துக்கு வந்த பரமக்குடி பஜார் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும்,ந சக காவலர்களும் விபத்தின் தன்மையை அறிந்தும் ஆம்புலன்ஸ் ஒர தாமதம் ஆகும். என்பதால் உடனடியாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி உடனடியாக இராமநாதபுரம் பயோனியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததோடு காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து சென்றார்கள்.

கடமை உணர்வோடும், மனித நேயத்தோடும் காயம் அடைந்த தம்பதிகளை மருத்துவமனையில் சேர்த்து சென்ற பரமக்குடி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் சக காவலர்களையும் பொது மக்கள் பாராட்டியதோடு  இப்படி மனித நேயத்தோடு பணியாற்றும் காவல் துறையினருக்கு அரசு மனித நேய விருது வழங்கி கௌரவரப்படுத்த முன் வர வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..