தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் அருகில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 7 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர். நிர்வாக நலன் கருதி பணியாளர் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இடம் மாறுதல் செய்யப்பட்ட நிகழ்வுகளில் முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு அவர் தம் சொந்த மாவட்டத்தில் பணிமூப்பு வரிசை பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும், டாஸ்மாக் நிறுவனத்தில் இல்லாத ஏரியா சூப்பர்வைசர் என்னும் பதவிகளை உருவாக்கி அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்துகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடை மூடலின் போது சரக்குகள் ஒப்படைப்பு செய்த நிகழ்வில் ஏற்பட்ட போக்குவரத்து செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் வேலாயுதம் முருகானந்தம் மாநில அமைப்பு செயலாளர் காமராஜ் மாநில துணை தலைவர் தினகரன் மாநில இணைச்செயலாளர் மாரிமுத்து மாநில துணை தலைவர் வினாயகமூர்த்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் ஞானசேகரன் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் பலர் கலந்து கொண்டனர்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..