Home செய்திகள் இராமநாதபுரம் ஆட்சியர் மதுரைக்கு மாறுதல்.. புதிய ஆட்சியராக வீர ராகவராவ் நியமனம்..

இராமநாதபுரம் ஆட்சியர் மதுரைக்கு மாறுதல்.. புதிய ஆட்சியராக வீர ராகவராவ் நியமனம்..

by ஆசிரியர்

தமிழகத்தில் உள்ள ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.நடராஜன் மதுரைக்கும், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இராமநாதபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் முனைவர் எஸ்.நடராஜன் ஐ.ஏ.எஸ்., அவர்கள் 2010 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவராவர். முனைவர் பட்டம் பெற்ற இவர் அடிப்படையில் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இவர் கணக்காளர் (இடைநிலை), தனிப்பட்ட சட்ட நிர்வாகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் எம்பிஏ ஆகியவற்றை நிறைவு செய்துள்ளார். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.) நிறுவனத்தில் வெற்றிகரமாகப் பணியற்றிய பின்னர், இவர் 1999 ஆம் ஆண்டில் குரூப் -1 சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் கோட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட விநியோக அலுவலராகப்பணி செய்த போது அவரது சிறப்பான பணிக்காக 2008 ஆம் ஆண்டின் தமிழக முதல்வரின் அண்ணா விருது வழங்கப்பட்டது. பின்னர் கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சேலத்தில் கார்பரேஷன் ஆணையராகப்பணியாற்றினார். அவர் மருத்துவ மற்றும் கிராம சுகாதார சேவைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். 22.01.2016 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

இராமநாதபுரம் புதிய ஆட்சியராக வீர ராகவராவ் பொறுப்பேற்க உள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!