கேரளா வெள்ள பேரிடர் மீட்பு பணியில் 25 ஆயிரம் SDPI வீரர்கள்!..

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பேரிடரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங்களின் வீடு, கால்நடைகள், பொருட்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிரழந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான இருப்பிடம்,உணவு, உடை, மருத்துவம் என அனைத்து விசயங்களிலும் தனி அக்கறையோடு செயல்படுவதற்காக அம்மாநில SDPI கட்சியின் சார்பில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கேரள மாநில பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஏளமரம் நஸ்ருதீன் மற்றும் SDPI கட்சியின் மாநில தலைவர் அப்துல் மஜீது ஃபைஜி ஆகியோரின் நேரடி பார்வையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழக SDPI கட்சி தனது சார்பிலும் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கேரளா SDPI கட்சியினரிடம் ஒப்படைத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று பெய்த கனமழையில் பரவூர் கிராமமே வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலையில் துரிதமாக செயல்பட்ட SDPI வீரர்கள் அந்த பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்குரிய மருத்துவம் மற்றும் உடை,உணவுகளை வழங்கினர்.
சமயோசிதமாக செயல்பட்ட வீரர்களின் அர்ப்பணிப்பு பணிகளை கண்டு வியந்த அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்தியது அங்குள்ள அனைவரையும் நெகிழச்செய்தது.
இந்திய ராணுவத்தின் தேசிய பேரிடர் மீட்பு குழுவோடு இணைந்து பல இடங்களிலும் மக்களை மீட்டெடுக்க பெரிதும் உதவிய வீரர்களை பாராட்டி THE MILLI GAZETTE என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
தற்போது அங்கு மழை குறைந்து நீர் அகற்றப்படும் பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில்,அங்கமாலி என்னும் கிராமத்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள் திரும்பிய போது பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெறும் அவலங்களும் நடந்து வருகின்றன.
பாம்புகளால் அவதியுறும் அப்பகுதி மக்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக SDPI கட்சியின் பாம்பு பிடிக்கும் குழு களமிறங்கி அங்குள்ள பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதை அம்மாநில நாளிதழ்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.
தன்னலம் பாராமலும் இரவு பகல் பாராமலும்,பசியை கூட பொருட்படுத்தாமலும் மக்களின் நலன் கருதி அக்கறையோடு மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் SDPI கட்சியின் அனைத்து வீரர்களுமே போற்றப்பட வேண்டியவர்களே.
செய்தி தொகுப்பு:கீழை ஜஹாங்கீர் அரூஸி.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..