சொக்கானை கிராமத்தில் விவசாயம் செழிக்க ஸ்ரீ அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சொக்கானை கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோயில் குதிரை எடுப்பு உற்சவ விழா வெகு விமர்சையாக நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சொக்கானை கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோயில் குதிரை எடுப்பு உற்சவ விழா இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெகு சிறப்பாக நடத்தப்படுவது உண்டு. இந்தாண்டு ஸ்ரீ அய்யனார் கோயில் குதிரை எடுப்பு உற்சவ விழா இரண்டு நாட்கள் நடந்தது. இவ்விழாவில் சிக்கலிலிருந்து மேளதாளங்கள் முழங்க மண்ணால் செய்யப்பட்ட குதிரையை சுமந்து ஊர்வலமாக வந்து கிராமத்தில் பிள்ளையார் கோயிலில் வைத்தனர். அங்கு மக்கள் குதிரையை வணங்கி நெல்லை காணிக்கையாக வழங்கி வணங்கினர். ஊர் முக்கியஸ்தர் பச்சமால் தெரிவிக்கும்போது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகிறோம். விழாவில் இரண்டு நாட்களும் சிறப்பு அன்னதானம் நடத்தப்படும். வள்ளி திருமணம், கரகாட்டம், ஆடல்பாடல், இன்னிசை கச்சேரி, வீரபாண்டிகட்டபொம்மன் நாடகம் என கலைநிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழா நடத்துவதன் முலம் விவசாயம் செழிக்கும், மக்கள் நோய்நொடியின்றி சுபிட்சமாக இருப்பர் என்பது காலம் காலமான எங்கள் நம்பிக்கை. இவ்விழாவில் சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று மிகவும் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடுவோம், என்றார்.

விழாவில் முன்னாள்  கடலாடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் மூக்கையா தேவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். முன்னதாக சிக்கலில் குதிரை எடுப்பு ஊர்வலத்திற்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தியதின் முலம் மதநல்லிணக்கத்திற்கு ஊதாரணமான விழாவாக அமைந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.