இராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்கள் இடமாற்றம் செய்ய எதிர்ப்பு… 24ல் திமுக., ஆர்ப்பாட்டம்..

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாலட்சுமி, சாவித்திரி காயத்ரி, சரஸ்வதி சங்கு, சக்கரம், கோடி ஆகிய தீர்த்தங்கள் கோயில் உருவாகிய காலம் தொட்டு உள்ளன. இந்துக்களின் ஆகம விதிகளின்படி உருவாக்கிய இத்தீர்த்தங்களை கோயில் நிர்வாகம் சிலர் சுயநலத்திற்காக தற்போது வேறு இடங்களுக்கு இந்த தீர்த்த கிணறுகளை மாற்ற முயற்சி எடுத்து வருவதாக தெரியவருகிறது.

இதனை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் தி.மு.க., நகர் பொறுப்பாளர் கே.இ.நாசர்கான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தீர்த்தக்கிணறுகள் இடமாற்றம் செய்யும் முயற்சியை கண்டித்து 24.8.2018 மாலை 3 மணிக்கு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் இராமேஸ்வரம் நகர் முழுவதும் சுவரொட்டிகள், கண்டன போர்டுகள் வைப்பதெனவும், உண்ணாவிரதம், கடையடைப்பு, பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தொன்மையை காக்க சர்வ கட்சி சார்பில் ஆக., 24ல் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று போராட்டம் வெற்றியடைய ஆதரவளிக்க வேண்டுமென நகர் திமுக பொறுப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..