தியாக திரு நாளில் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு கீழை நியூஸ் நிறுவனம் சார்பாக விருந்து..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிகோட்டை கருணை இல்லத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கீழக்கரையை சேர்ந்த பல தொண்டு உள்ளம் நிறைந்தவர்கள் மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் நிர்வாகிகள் வழிகாட்டுதலோடு உணவு வழங்கி வருகின்றார்கள். இந்த தகவல் கடந்த வாரம் கீழக்கரை டைம்ஸ், கீழை நியூஸ் இணைய தள பக்கத்தில் இணைய பக்கத்தில் செய்தியாக வெளிவந்து இதன் மூலம் இப்படிபட்ட பள்ளி இந்த கிராமத்தில் செயல்படுவது பல தொண்டு உங்கள் படைத்தவர்களுக்கு தெரியவந்தது. இதன் மூலம் பலர் இந்த கருணை இல்லத்திற்கு உணவு,உதவி வழங்கி வருகின்றார்கள்.

இதன் தொடர்ச்சியாக தியாக திரு நாளாக பக்ரீத் நாளான இன்று கீழை நியூஸ், சத்தியப்பதை கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளை  நிறுவனத்தினர் இந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கினார்கள். இதன்  முழு பொறுப்பையும் மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் நிர்வாகிகளிடம் வழங்கி இருந்தார்.

இந்த சிறப்பான சேவை பற்றி கீழக்கரை கிழக்குத்தெரு துணைப்பொருளாளரும்,சமூக ஆர்வலருமான முகம்மது அஜிஹர், “கூறுகையில் இந்த தொண்டு உள்ளம் நிறைந்த இந்த பணி முற்றிலும் இறை பொறுத்தம் நிறைந்த பணியாகும். ஒரு மனிதருக்கு உணவு அளிப்பது இஸ்லாமிய பார்வையில் சிறந்த பணியாகும். இதில் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளை கண்டு பிடித்து உணவு வழங்குவது கூடுதல் சிறப்பு ஆகும். தொண்டு உள்ளம் படைத்தவர்கள் இந்த கருணை இல்லத்திற்கு தொடர்ந்து உதவ முன் வர வேண்டும் என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..