வரும் வியாழக்கிழமை “ZERO SHADOW DAY”…

நாமக்கல் மாவட்டத்தில், வரும் வியாழன் (23-08-2018) அன்று நிழல் இல்லா நாளாக இருக்கும். இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு, இரண்டு நாள் மட்டுமே இருக்கும்’ என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட செயலாளர் கூறியதாவது: சூரியன், தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், சூரியன் சரியாக தலைக்கு மேல், நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு, இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள, ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது அந்த நாளையே நிழல் இல்லா நாள் என்கிறோம் அனைத்து இடங்களிலும், ஒரே நாளில் இது நிகழ்வதில்லை அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப, வெவ்வேறு நாட்களில் நிகழும். சூரியனின் வட நகர்வு நாட்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாட்களில், ஒரு நாளும், என ஆண்டுக்கு, இருமுறை இது நிகழும். மேலும், பகல், 12:00 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும்.

நாமக்கல் மாவட்டத்தில், 23-08-2018 வியாழன் அன்று இந்நிகழ்வு நிகழ்கிறது. பள்ளி மாணவர்கள் காணும் வகையில், அறிவியல் இயக்கம் சிறப்பு வசதிகளை செய்துள்ளது. குமாரபாளையம், ராசிபுரம், குருசாமிபாளையம் மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில், நிழல் இல்லா தினம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.