பேறுகாலத்துக்கு சென்ற பெண்ணை கர்ப்பம் இல்லை என திருப்பிய அரசு மருத்துவமனை – ஆட்சியரிடம் மனு..

மதுரை வீரகனூர் கோழிமேடு பகுதியில் வசித்து வரும் நவநீதகிருஷ்ணன் (31) மனைவி யாஸ்மீன் (வயது 25). இவர் களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.  இந்திலையில் இவர் கடந்த அக்டோபர் மாதம் 2017 அன்று மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது அவர் கர்ப்பமடைந்து இருப்பதாகவும் அதனால் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை பெற்று கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதை தொடர்ந்து யாஸ்மீன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே உட்பட அனைத்து பரிசோதனை செய்ததில் அவர்களும் உறுதி செய்து யாஸ்மீனுக்கு கர்ப்பமானவர்களுக்கு கொடுக்கும் அனைத்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மகப்பேறு காலம் (9மாதம்) நிறைவடைந்ததும் அவர்கள் குழந்தையை பெற்றெடுக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வந்து அட்மிஷன் போட்டனர்.

மகப் பேறு வார்டில் குழந்தை பேறுக்கு உள்ள டிரஸ் மற்றும் அனைத்து வகையிலும் தயாராக மகப் பேறு அரங்கு கூட்டி சென்று இனிமா கொடுத்து உள்ளே கூட்டி சென்ற சிறிது நேரத்தில் உனக்கு குழந்தை இல்லை என்று கூறியுள்ளனர், வயிற்றில் கட்டி எவையேனும் உள்ளதா என்று கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் அவர்களை அனுப்பிவைத்துள்ளனர்.

அதை தொடர்ந்து அவர்கள் இன்று (20/08/2018) மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுக்க வந்தனர். அப்பொழுது பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, “எனக்கு கர்ப்பம் என இத்தனை மாதங்கள் தவறான  சிகிச்சை அளித்த  இராஜாஜி மருத்துவமனை ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும், மேலும் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளேன், அதற்கு தகுந்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்” என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மதுரை நிஷா ஃபவுன்டேசன் உதவியுடன் மனு அளித்துள்ளதாக கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார செவிலியரை தொடர்பு கொன்டால் செல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி மருத்துவமனை டாக்டர்களும் இதற்கு பதில் கூற மறுக்கின்றனர்.

பேட்டி 1. யாஸ்மின் – கர்ப்பினி பெண்

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..