பொதுப்பணித் துறை தூர் வாருதல், பராமரிப்பு பணிகளில் ஊழல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரனை தேவை பி ஆர்.பாண்டியன் கோரிக்கை ..

கும்பகோணம், திருவையாறு, கல்லனை பகுதிகளில் காவிரி, கல்லனை பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம்  பி.ஆர். பாண்டியன்  தெரிவுத்ததாவது,.

கும்பகோணம் அருகே அருகே அசூர், பெருமான்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் காவிரியின் முதல் மடை பாசன கிராமங்களுக்கு காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் சென்றடையாமல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது. காவிரியில் கூடுதல் தண்ணீர் விடுவித்தால் கரைகள் உடைந்து விடும் என்று அச்சப்படுகிறார்கள். எனவே உடன் பாசன மதகு அருகே காவிரியின் குறுக்கே தள மட்ட சுவர் அமைத்து தர வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாக தூர் வார பராமறிப்பு, தூர்வாருதல், குடிமாரமத்து உள்ளிட்ட 3 தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையும் அரசியல் தலையீட்டால் ஊழல் முறைகேடுகள் செய்ததால் ஆறுகளில் வரும் தண்ணீர் விளை நிலங்களுக்கு சென்றடைவில்லை எனவே இது குறித்து சிபிஐ விசாரனை நடத்திட வேண்டும் இல்லையேல் காவிரி டெல்டா பாலைவனமாக மாறிவிடும் என எச்சிரிக்கிறேன். இதனை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 25ல் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.

காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் OVM கிருஷ்ணசாமி, தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி செயலாளர் ரமேஷ். உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராதா, பாலையன் அசூர் கருப்பையன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். என மணிமாறன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..