வாக்காளர் பட்டியல் மாற்றியமைப்பு.. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சதியா??..

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்காளர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இதன் அபாயத்தை சில சர்வதேச ஊடகங்களும்,  இந்திய ஊடகங்களும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பலைகள் இருந்தாலும், மத்திய அரசு  அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முழு மூச்சாக உள்ளது. இதன் அபாயத்தை “THE WIRE” குறிப்பிட்டுள்ளதை, கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்..

https://thewire.in/politics/ahead-of-2019-bjp-is-out-to-rearrange-the-electorate

காஷ்மீரில் நிரந்தர குடியுரிமை பெற்று வசித்து வரும் மக்களை வெளியேற்றும் நோக்கில் அம்மக்களுக்கு சிறப்பு உரிமையையும், அந்தஸ்தையும் வழங்கிய இந்திய அரசியலமைப்பு சட்டம் (INDIAN CONSTITUTION) பிரிவு 35 A சட்டத்தை நீக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் காஷ்மீரில் சொந்த இடம் வாங்கவோ அல்லது அரசு துறைகளில் பணியில் சேரவோ வேண்டுமென்றால் நிரந்தர குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். இது போன்ற சிறப்பதிகாரம் தற்போது மத்தியில் ஆள்பவர்களுக்கு  தேர்தலில் வெற்றி பெற பெரும் தடையாகவே உள்ளது. அந்த ஊரில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் மோடி கோஷம் குறைவாகவே ஒலிக்கிறது. ஆகையால் அச்சட்டத்தை நீக்குவதன் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து ஆதரவாளர்களை இறக்கி ஆட்சியை பிடித்து முஸ்லிம்களை அகதிகளாக்குவது ஒரு வகையான திட்டம்.

மறு புறமோ முஸ்லிம் என்ற ஒரே காரணத்தால் 40 ஆண்டுகளுக்கு மேலாக அஸ்ஸாமில் வசித்து வந்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்து அகதிகளாக்கி உள்ளனர். அதே வேளை பாக்கிஸ்தானிலோ, வங்காள தேசத்திலோ வசித்து வரும் மத்திய அரசு ஆதரவாளார்களுக்கு குடியுரிமை வழங்கி எதிர்வரும் தேர்தலில் அதனை வாக்கு வங்கியாக மாற்றுவதே திட்டமாக உள்ளது. அதன் எதிரொலியாக அஸ்ஸாமில் குடியுரிமை ரத்து என்ற நாடகம் நடந்தேறி வருகிறது.

இது போன்ற சூழலில் வாக்காளர் அட்டையை இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ சரி பார்த்து கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் வாக்காளார் அட்டை உள்ளவர்களே பல சமயங்களில் வாக்களிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தற்போது மிண்ணனு வாக்கு இயந்திரம் பயன்பாட்டில் உள்ள காரணத்தால் கணிணி மூலம் வாக்களர் பட்டியல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதில் அதிக அளவில் முறை கேடு நடக்க வாய்ப்பு உள்ளதால் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது அவசியமான ஒன்றாகும்.