முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயல்முறை கருத்தரங்கம்…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயல்முறை கருத்தரங்கம்  இன்று (18.8.2018)  காலை 10 மணி அளவில் கல்லூரி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு அரபித் துறை தலைவர் ரெய்ஹானத்தில் அதவியா  இறைவணக்கத்துடன் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து  கல்லூரி முதல்வர் Dr.A.R. நாதிரா பானு கமால் வரவேற்புரை வழங்கியதுடன், கற்பித்தல் ஆகியவற்றை  தொடர்பு தொழில் நுட்ப உபகரணங்கள் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை பின்பற்றி, மாணவர்களுக்கு ஈர்க்க கூடிய ஆசிரியராக எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில்  கல்லூரியின் நிர்வாக தலைவர் S.M. முஹமது யூசுப் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, அனைத்து பேராசிரியர்களுக்கும்,  மாணவர்களுக்கும்  உலக அறிவியலையும், புதிய உத்திகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும்,  மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் கற்பிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் அறக்கட்டளை சார்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருமதி. N.ஜெயசந்திரா கணினி அறிவியல் துறைத்தலைவர்,  லேடி டோக் கல்லூரி-மதுரை,  பேராசிரியர்களுக்கு தகவல்தொழில் நுட்ப உதவியுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை செயல்முறைப் பயிற்சியின் மூலம் விளக்கினார். இதனை பயன்படுத்தி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் முறை, மற்றும் தகவல் பரிமாற்றப்பயிற்சிகளை வழங்கும் செயல்முறைகளையும் விளக்கினார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக  பிற்பகலிலும் செய்முறை பயிற்சி நடைபெற்றது.  இறுதியாக திருமதி.G.குணவதி, கணிதவியல் துறைத்தலைவர் மற்றும் பேராசியர்கள் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..