இடிந்து விழும் நிலையில்  மேல்நிலை குடிநீர் தொட்டி..

இராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி குடிநீர் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. மேலும் இங்குள்ள மேல்நிலை தொட்டியில் தேக்கப்படும் தண்ணீர் அத்தியாவசிய தேவைகளுக்கு இங்குள்ள குழாய்களில் ஊராட்சி நிர்வாகம் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் தொய்வடைந்துள்ளது. இங்குள்ள மேல்நிலை தொட்டி நீண்ட நாட்களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் இடையே அச்சம் நிலவி உள்ளது. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் தண்ணீர் தொட்டி அருகே இன்று மாலை தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து கிராம பெண்கள் கூறுகையில், ” ஆபத்தான நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை செப்பனிடக் கோரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மேலும் ஊராட்சி நிர்வாகத்திடமும் நேரில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image