Home செய்திகள் களத்தில் குதித்த அதிகாரிகள்…. குவியும் பாராட்டுகள்!… அரிசி மூட்டையை தோளில் சுமக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!!!

களத்தில் குதித்த அதிகாரிகள்…. குவியும் பாராட்டுகள்!… அரிசி மூட்டையை தோளில் சுமக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!!!

by ஆசிரியர்

வயநாடு பகுதியில் அனைத்து மீட்புப்பணிகளையும் முடித்துவிட்டு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜமாணிக்கமும், உமேஷும் வந்துள்ளனர். அந்தநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தது. ஆனால் நிவாரணப் பொருட்களை இறக்கி வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் யாருமில்லை.

இதனால் மக்களுக்கான நிவாரணப் பொருள்களை தாங்களே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மேலும், இரவு பகலாக அதிகாரிகள் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் மாநில உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையராக பணியாற்றுகிறார். இவரின் மனைவியும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான நிஷாந்தினியும் தற்போது கேரள மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும், தமிழகத்தில் அரசுப் பள்ளியில், ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து படித்து முன்னேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!