இராமநாதபுரத்தில் தனியார் நிறுவன திறப்பு விழாவுடன் சுதந்திர தின விழா..

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் சென்டர் பாயின்ட் மையம் திறப்பு விழா மற்றும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமாகா மண்டபம் வட்டாரத் தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க பட்டயத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பன்னாட்டு நிறுவன ஆலோசரும், ஆடிட்டருமான அகமது தீன் வரவேற்றார்.

இராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். என் மனங்கொண்டான் மாலிக், நான்கு வழிச்சாலை நில எடுப்பால் பாதிக்கப்பட்டோர் மீட்பு நலச் சங்க தலைவர் சீனிவாசன், சமூக ஆர்வலர்கள் என் மனம் கொண்டான் அமீன், முத்து முகமது, புதுமடம் தமுமுக தலைவர் சகுபர் சாதிக், புதுமடம் மக்கள் நல மன்ற தலைவர் பக்கீர் முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal