“அனைவருக்கும் வீடு” என்ற முயற்சியில் கீழக்கரை பைத்துல்மால்..

கீழக்கரையில் பல பொருளாதார உதவிகளை செய்து வரும் கீழக்கரை பைத்துல்மால், அனைவருக்கும் சொந்த வீடு என்ற நோக்கில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  300 சதுரடி வீட்டடி நிலம் வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்து வீடு கட்ட உதவுதல் திட்டத்தை கீழக்கரை பைத்துலமால் அமைப்பு ஆரம்பம் செய்துள்ளது.

இத்திட்டத்தை பற்றி  இஸ்லாமிய பைத்துல் மாலின் கீழக்கரை நகர் ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான முகம்மது அஜீகர் கூறுகையில்,  “கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 300 சதுர அடி வீட்டடி நிலம் வைத்து வீடு கட்ட பொருளாதார வசதி இல்லாமல் இருக்கும் எளியவர்களுக்கு வீடுகட்டி தரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இவ்வருடத்தில் முதல் தொடக்கமாக ஒரு வீடு கட்டி தர திட்டமிடபட்டுள்ளது.  பின்னர் புரவலர்கள் ஒத்துழைப்பு இருக்குமானால் இத்திட்டத்தில் மேலும் வீடுகள் கட்டி தர பரிசீலக்கப்பட்டு வருகிறது. கீழக்கரையில் உள்ளவர்கள் அந்தந்த ஜமாத்கள் மூலம் விண்ணபிக்கலாம். விண்ணப்பங்கள் பெறபட்டு யாருக்கு வீடு கட்டி தருவது என்பது குலுக்க முறையில் தேர்வு செய்யப்படும்” என்றார்.

அதேபோல்  கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் முத்து மரைக்காயர் என்ற பசீர் அஹமது கூறுகையில், “கடந்த பல வருடத்திற்கு முன் இப்படி ஒரு திட்டம் இஸ்லாமிய பைத்துல் மாலில் இருந்து பல ஏழைமக்கள் பயன் அடைந்தனர்.தற்போது இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது@ என்றார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..