72வது சுதந்திர தின விழா.. இராமநாதபுரத்தில் ஆட்சியர் கொடியேற்றினார்.

72வது சுதந்திர தினத்தை யொட்டி இராமநாதபுரம் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதை தொடர்ந்து போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டார்.

தியாகிகளுக்கு கதராடை போர்த்தி கவுரவித்தார். 83 பயனாளிகளுக்கு ரூ 1.03 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அனைத்து துறை சாதனை விளக்கம், தூய்மை பாரதம், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி வாகன அணிவகுப்பு நடந்தது. காவல், வருவாய், கல்வி, சமூக நலம், சுகாதாரம், வேளாண்மை, மருத்துவம் உள்பட அனைத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 102 ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவர் காமினி,  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, கோட்டாட்சியர் சுமன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஹெட்ஸி லீமா அமாலினி, கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்று, சுகாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..