உணவின்றி தவித்த இலங்கை அகதி பெண்ணிடம் நீதிபதிகள் விசாரணை..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு முகாம்களில் போலீஸ் பாதுகாப்பில் தங்கியுள்ள அகதிகளுக்கு உணவுப்படியாக தினமும் ரூ.100 வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கு 24 வயது இளம்பெண்ணுக்கு 45 நாட்களாக உணவு வழங்கப்படாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு இராமநாதபுரம் இலவச சட்ட உதவி மையம் மூலம் தீர்வு கிடைக்குமா என வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது. இதனடிப்படையில் இலவச சட்ட உதவி மைய தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கயல்விழி, செயலாளரும் இராமநாதபுரம் சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் ஆகியோர் மண்டபம் அகதிகள் முகாம் வந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது. 15 நாள் வழங்கப்படாத உணவுப் படியை அரசு விதிகளுக்குட்பட்டு விடுவித்துள்ளதாக நீதிபதிகளிடம் அகதி மறுவாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், ‘ அகதிகள் பிரச்னைகள் மட்டுமின்றி இலவச சட்ட உதவி மையத்திற்கு வரும் புகார்கள் மீது உரிய விசாரணை செய்து சட்ட உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் , என்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..