Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மோமோ – உங்களுக்கு ஓர் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவு!..

மோமோ – உங்களுக்கு ஓர் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவு!..

by ஆசிரியர்

இணையத்தின் தீய விசயங்களில் ஒன்று இளைஞர்களை சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிடும் விளையாட்டுக்கள் (Death Games). சில மாதங்களுக்கு முன்பாக புளுவேல் (BlueWhale) விளையாட்டு வந்தது, தற்போது அதனைப்போலவே மோமோ (MoMo Challenge) என்கிற விளையாட்டு வந்திருக்கின்றது. இவை இரண்டுமே விளையாடுவோரை தற்கொலைக்கு தூண்டக்கூடிய விளையாட்டுக்கள்.

மோமோ விளையாட்டு என்றால் என்ன ?..

தற்போது பிரபலமடைந்து கொண்டிருக்கும் ஆன்லைன் கேம், இதன் நோக்கம் தற்கொலைக்கு தூண்டுவதுதான்.

அர்ஜென்டினாவில் 12 வயது சிறுமியின் தற்கொலைக்கு காரணம் மோமோ விளையாட்டுதான் என போலீசார் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு ஏஜென்சிகளும், போலீசாரும் மோமோ விளையாட்டினை விளையாட தங்களது பிள்ளைகளை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தியது.

தற்கொலைக்கு தூண்டும் மோமோ விளையாட்டு:-

மோமோ விளையாட்டினால் இந்தியாவில் இதுவரை பாதிப்புகள் இல்லையென்றாலும் நமது பிள்ளைகளுக்கு அது குறித்து தெரிவித்து பாதுக்காப்பாக இருக்க செய்வது நல்லது . ஆரம்பகாலங்களில் facebook group களின் மூலமாக ஆரம்பித்த மோமோ விளையாட்டு தற்போது whatsapp வாயிலாகவும் வர ஆரம்பித்துள்ளது.

நாம் ஒருமுறை மோமோ வை தொடர்பு கொண்டுவிட்டால் அந்த எண்ணில் இருந்து தொடர்ச்சியாக நமக்கு மெசேஜ்கள் வர ஆரம்பிக்கும். நம்முடன் நட்புடன் பேச ஆரம்பிக்கும் மோமோ பிறகு எப்படி புளுவேள் விளையாட்டில் தொடர்ச்சியாக நமக்கு சிறு சிறு task (போட்டி ) வழங்கப்படுமோ அதனை போன்றே இதனை செய் அதனை செய் என போட்டிகளை கொடுக்க ஆரம்பிக்கும். போகப்போக நம்மை அதனுடைய கட்டுப்பாட்டில் கொண்டுபோகும் அளவிற்கு ஒவ்வொரு விளையாட்டும் மனநிலையை பாதிக்க கூடியதாக இருக்கும்.

ஆனால் இரண்டினுடைய நோக்கமும் இறுதியில் தற்கொலையை தூண்டுவதுதான்.

மோமோ விளையாட்டு எப்படி செயல்படுகிறது?:-

உங்களது WhatsApp எண்ணிற்கு புது எண்ணிலிருந்து மெசேஜ் வரும். தன்னை மோமோ என அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த எண் தன்னை அப்படியே நமது மொபைலில் பதிந்து கொள்ளுமாறு சொல்லும். மேலும் நம்மோடு அன்பாக பேசி நம்மை பற்றிய சாதாரண தகவல்கள் முதல் அந்தரங்க தகவல்கள் வரை அனைத்தையுமே பெற முயலும் இந்த மோமோ .

813 , 52 , 57 என்று தொடங்கும் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்.

மோமோவின் பெயரில் தற்போது மூன்று எண்கள் இருக்கின்றன. ஜப்பானில் இருந்து வரும் எண்ணானது 813 என தொடங்குகிறது. கொலம்பியா எண் 52 என தொடங்குகின்றது. மெக்சிகோ எண் 57 என தொடங்குகின்றது.

மோமோவின் WhatsApp Profile போட்டோ:-

ஒரு அன்பான நண்பரை போல பேசிடும் இந்த மோமோ ஆரம்பத்தில் சாதாரண விசயங்களை செய்யச்சொல்லி அன்பு கட்டளையிடும். சிறுவர்கள் எளிமையானதுதானே என ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிப்பார்கள்.

பிறகு தான் மோமோ அசாதரணமான வேலைகளை செய்யச்சொல்லும். நாம் சிலவற்றை செய்யாமல் மறுக்கும்போது நமது வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவு கொடுப்பேன் எனவும் பயமுறுத்துவேன் எனவும் மிரட்ட ஆரம்பிக்கிறது.

இறுதியாக நமக்கு கொடுக்கப்படும் task தற்கொலை செய்துகொள்வது தான்.

விளையாடா விட்டால் மோமோ நம்மை மிரட்டுவது எப்படி?:-

மோமோ ஒரு ஆன்லைன் விளையாட்டு தானே எப்படி நாம் இதனைச்செய்ய வேண்டும் அதனை செய்யவேண்டும் என வற்புறுத்துகிறது? செய்யாமல் போனால் என்னாகும் என கேட்கலாம்.

மிகச்சரியான கேள்வி , இங்குதான் மோமோவின் செயல்பாட்டினை நாம் புரிந்துகொள்ளவேண்டும் . மோமோ இரண்டுவழிகளில் நம்மிடமிருந்து தகவல்களை திருடுகின்றது.

ஒன்று நேரடியாக நம்மிடம் சில விசயங்களை செய்யச்சொல்லி பெறும். உதாரணத்திற்கு அரைகுறை ஆடையோடு போட்டோ அனுப்பச்சொல்வது போன்றது.

இரண்டாவதாக, மோமோ நமக்கு அனுப்பிடும் போட்டோவினை டவுன்லோடு செய்திடும்போது அதோடு சேர்த்து அனுப்பப்படும் malware நமது மொபைலில் தரவிறக்கப்பட்டு நம் அனுமதியில்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும்.

பிறகு நமது மொபைலில் இருக்கும் தகவல்கள் (photo, video ) என அனைத்தையுமே திருடுகின்றது. மேலும் நமது camera போன்றவற்றை தானாக இயக்கிடும் அளவிற்கு செல்கின்றது .

மோமோவிற்கு பயப்பட வேண்டுமா ?

மோமோ விளையாட்டினை சோதிக்க எண்ணி விளையாடியவர்கள், மோமோ நமது மொபைலில் இருக்க கூடிய தகவல்களை திருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒருமுறை முகத்தினை மூடிக்கொண்டு மெசேஜ் அனுப்பியபோது மோமோவிடமிருந்து வந்த மெசேஜ் “ஏன் முகத்தினை மூடிக்கொண்டு பேசுகிறாய் ?”. இதன் மூலமாக நம்முடைய அனுமதியில்லாமலே கேமெராவை மோமோ இயக்குவது தெரியவந்துள்ளது.

மோமோ மட்டுமல்ல சாதாரணமாக இணையத்தில் பல ஆப்கள் நம்முடைய தகவல்களை திருடும் வண்ணமும் நம்மை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான வகையிலுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தை கண்டுமே நாம் பயப்பட்டு தான் ஆகவேண்டும்.

மோமோ பயமுறுத்துவதைப்போல குடும்ப உறுப்பினர்களை ஏதாவது செய்துவிடுவேன் என்று மிரட்டி அதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டதாக செய்தியில்லை.

நாம் பகிர்ந்த அல்லது நமது மொபைலில் இருந்து திருடிய அந்தரங்க தகவல்களை யாருக்கேனும் அனுப்பிவிடுவேன் அல்லது இணையத்தில் கசியவிட்டுவிடுவேன் என மிரட்டலாம் அதனை மோமோவினால் செய்யவும் முடியும்.

பெற்றோர்களும் சிறுவர்களும் எப்படி மோமோவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது ?

தற்போது சிறுவர்களுக்கு மொபைல் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம், விளைவு விளையாட்டு என்கிற பெயரில் வருகின்ற அனைத்தையுமே விளையாட தொடங்குகிறார்கள்.

ஆகையால் உங்களது பிள்ளை எவ்வாறு மொபைலை பயன்படுத்துகிறார், என்னென்ன விளையாட்டுகளை விளையாடுகிறார் என்பதனை குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணியுங்கள் .

யாரென்று தெரியாதவர்களிடம் பேசாமல் இருப்பதே பாதுகாப்பானது.

குழந்தைகளுக்கு ஆப்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள்.

உங்களது குழந்தையின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் இருப்பின் உடனடியாக அதனை கவனித்து அவர்களிடம் பேசிடுங்கள்.

இளைஞர்கள் புதிய எண்களில் இருந்து வருகின்ற image களை தரவிறக்கம் செய்வதோ அல்லது chat செய்வதோ கூடாது.

இணையதளம் எவ்வளவு நல்லதோ அதனைபோலவே பாதுகாப்பற்ற ஆபத்தான விசயங்களையும் கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தாலே போதுமானது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!